2026 மே 01, வெள்ளிக்கிழமை

ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தியாலயத்திற்கு பிளாஸ்டிக் கதிரைகள் அன்பளிப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 07 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.லோஹித்


மட்டக்களப்பு, ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு வித்தியாலயத்தின் சுவிட்சர்லாந்து பழையமாணவர் சங்கக் கிளையினரால் ஒரு தொகுதி பிளாஸ்டிக் கதிரைகள் நேற்றைய தினம் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

பாடசாலை அபிவிருத்திக் குழுவின் வருடாந்த பொது கூட்டத்தின் போதே இந்த 300 பிளாஸ்டிக் கதிரைகளும் வழங்கப்பட்டன.

வித்தியாலய அதிபர் ரி.சுதாகர்  தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மட்டக்களப்பு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஆ.பாலசுப்பிரமணியம், கல்குடா வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.ப.இளங்கோ, ஆசிரியர்கள், பழையமாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் புதிய நிர்வாகிகளாக தலைவர்- ரி.சுதாகர்(அதிபர்), உபதலைவர்- ரி.முருகமூர்தி (பிரதி அதிபர்), செயலாளர்- கே.ஜெகன்மோகன், உபசெயலாளர் -எஸ்.ரஜூவ், பொருளாளர்; ஆர்.தவயோகராஜா (ஆசிரியர்) ஆகியோரும் நிர்வாக உறுப்பினர்களாக வ.சசிகரன், திருமதி.பா.பூங்கோதை, மு.கௌரி, திருமதி.சி.சிறிகலா, திருமதி.க.ஜெயந்தி, ஆசிரியர்களான திருமதி.கிருபைராசா, லிங்கேஸ்வரன், திருமதி.சி.தவராசா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .