2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

புலமைப்பரிசில் அடிப்படையில் சுற்றுலாத்துறை தொடர்பான கற்கைகள் வழங்க நடவடிக்கை

Kogilavani   / 2013 பெப்ரவரி 15 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்

ஹோட்டல் மற்றும் சுற்றுலாத் துறைகளில் மனிதவள அபிவிருத்தி பயிற்சி நெறிகளை புலமைப்பரிசில் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் நடத்தவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனமும் இலங்கை வர்த்தக சம்மேளனமும் இணைந்து 'கல்வி அமைச்சின் அறிவூட்டல் சமூகம்' எனும் கல்வித் திட்டத்தின் கீழ் உள்ளூர் சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறைகளை மேம்படுத்துவதற்காக இப் பயிற்சி நெறியினை நடத்தவுள்ளது.

புலமைப்பரிசில் அடிப்படையில் முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ள இப் பயிற்சி நெறி தொடர்பான மேலதிக விபரங்களை மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் மட்டக்களப்பு தாமரைக்கேணியிலுள்ள அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுகொள்ள முடியும்.

இப்பயிற்சி நெறிகளில், விடுதி பராமரிப்பு, உல்லாசப் பிரயாணி வழிகாட்டிப் பிரயோகம், வரவேற்பாளர் போன்ற கற்கை நெறிகள்; வழங்கப்படவுள்ளன.

18- 28 வயதுக்குட்பட்ட கல்விப் பொதுதராதர சாதாரண தரத்தில் சித்தியடைந்த இளைஞர் யுவதிகள் இப் பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி நெறிகளை முழுமையாக பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு கல்வித் திணைக்களமும் இலங்கை வர்த்தக சம்மேளனமும் இணைந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சர்வதேச தரத்திலான சான்றிதழ்களை வழங்கவுள்ளன.

இந்தப் பாடநெறிகள் மார்ச் மாத இரண்டாவது வாரத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.

கிழக்கில் அபிவிருத்தியடைந்துவரும் சுற்றுலாத்துறையில் காணப்படும் ஆளணி வெற்றிடங்களை குறைக்கும் வகையில் இப் பாடநெறி மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .