2026 மே 06, புதன்கிழமை

வண்ணத்துப்பூச்சி சிறுவர் சமாதானப் பூங்கா கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு

Kogilavani   / 2013 மார்ச் 11 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்


கடந்த 17 வருடங்களாக மட்டக்களப்பில் இயங்கி வரும் வண்ணத்துப் பூச்சி சிறுவர் சமாதானப் பூங்கா தற்சமயம் கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு அதற்கான நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சிறுவர் வண்ணத்துப் பூச்சி சமாதானப் பூங்காவில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இத்தெரிவு இடம்பெற்றது.
இதற்காக பணிப்பாளர் சபை, நிதிக்குழு என்பனவற்றிற்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுளளனர்.

கடந்தகால ஆயுத வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை கலைப்பணி, இதயப்பணி, நிலப்பணி என்பனவற்றிறகு ஊடாக தொடர்புபடுத்தி குணப்படுத்தல் எனும் திட்டத்தின் கீழ் 1995 ஆம் ஆண்டு இந்த வண்ணத்துப் பூச்சி சிறுவர் சமாதானப் பூங்கா மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அடிகளார் போல். சற்குணநாயகம், மற்றும் சமூக சேவையாளரான ஏ.எச்.ஏ. ஹுஸைன் ஆகியோர் கனடாவிலுள்ள மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஹக் மக்மில்லன் குணப்படுத்தல் வைத்தியசாலைக்குச் சென்று இத்திட்டத்திற்கான செயற்பாடுகளைக் கற்றறிந்து இலங்கையில் இத்திட்டத்தை அமுலாக்கினர்.

சிறுவர் நல ஆக்கபூர்வ கலைஞரான போல் ஹோகன் எனும் கனேடிய ஆர்வலர் இந்தத் திட்டத்தின் முன்னோடியாவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .