2026 மே 06, புதன்கிழமை

யானை தாக்கி இராணுவ வீரர் காயம்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 22 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி இராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொப்பிகல பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில்  இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தொப்பிகல பிரசேத்தில்  உள்ள 16ஆவது படைப்பிரிவில் கடமையாற்றும் வி.பி.எம்.தென்னக்கோன் என்ற இராணுவ வீரரே யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கடமைக்காக வீதியால் வந்துகொண்டிருந்த இவரை காட்டுப்பகுதியால் வந்த யானை ஒன்று தாக்கியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

யானையின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த இந்த இராணுவ வீரர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .