2026 மே 04, திங்கட்கிழமை

மருத்து எடுத்துக்கொண்டு வீடு திரும்பியவர் விபத்தில் சிக்கி பலி

Kanagaraj   / 2013 ஏப்ரல் 10 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,கே.எஸ்.வதனகுமார் 


நெஞ்சு வலிக்கு மருந்து எடுத்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பிய பெண் உழவு இயந்திரத்தின் டயரில் சிக்கி பலியாகியுள்ளார்.

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள வாழைக்காலை எனுமிடத்தில் இந்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நல்லதம்பி லலிதா கலியுக வரதராஜ் (வயது 45) என்பரே இவ்வாறு விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார்.

மண்டபத்தடி வைத்தியசாலைக்கு வந்து நெஞ்சு வலிக்காக மருந்து எடுத்துக் கொண்டு கணவர் மற்றும் 5 வயதுக் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் குறித்த பெண் சென்றுள்ளனர்.

எதிர்ப்புறமாக உழவு இயந்திரத்தை ஓட்டி வந்த தனது நண்பரை நிறுத்தி இருவரும் கதைத்துவிட்டு விட்டு பின்னர் இருவரும் தத்தமது வாகனத்தை இயக்கியுள்ளனர்.

அவ்வேளையில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த மனைவி பிடி நழுவி கீழே வீதியில் விழுந்துள்ளார்.அப்பொழுது எதிர்பாராத விதமாக உழவு இயந்திர டயரில் சிக்குண்டு அவர் மரணித்துள்ளார்.

அவரது கணவரும் முன்னால் அமர்ந்திருந்த குழந்தையும் தெய்வாதீனமாகக் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

சடலம் தற்சமயம் மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் . சம்பவம் குறித்து வவுணதீவுப் பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .