2026 மே 04, திங்கட்கிழமை

இரட்டைக் கொலை: விசாரணைக்கு விசேட குழு

Kogilavani   / 2013 ஏப்ரல் 11 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, செங்கலடியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைகள் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் இக்கொலை தொடர்பில்; விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட புலனாய்வாளர்கள் கொழும்பிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 8 ஆம் திகதி செங்கலடிச் சந்தி பதுளை வீதியிலுள்ள வீடொன்றில் வர்த்தகரும்; அவரது மனைவியும் இனந்தெரியாத நபர்களினால் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம தொடர்பில், தடயவியல் நிபுணர்கள் மற்றும் புலனாய்வாளர்களைக் கொண்டு விசாரணைகள் பல கோணங்களில் முடுக்கி விடப்பட்டிருப்பதாக புலனாய்வுப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .