2026 மே 04, திங்கட்கிழமை

தாழை மரங்களை பாதுகாக்குமாறு கோரிக்கை

Kanagaraj   / 2013 ஏப்ரல் 12 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக காத்தான்குடி கடற்கரையோரம் இயற்கையின் கொடையாக செழித்து நின்ற ஆயிரக்கணக்கான தாழை மரங்கள் முற்று முழுதாக அழிவடைந்து வருகின்றன.

இவ்வாறு அழிவடையும் இயற்கையின் வளமான இம்மரங்களை மீண்டும் வளர்ப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடற்கரையோரங்களில் பாரிய அளவில் பெரும் பற்றைகளாக வளர்ந்து செழிப்பையும் நிழலையும் தந்த தாழை மரங்கள் தற்போது வெயிலில் கருகி முற்றுமுழுதாக அழிந்து வருகின்றது.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட வனபரிபாலன திணைக்கள உதவி பணிப்பாளர் எம்.ஐ.நபீஸிடம் வினவியபோது. அழிவடைந்த தாழை மரங்களை மீள நடுகை செய்து மீண்டும் உற்;பத்தி செய்யமுடியும்.ஆனால் தற்போதைக்கு எங்களிடம் தாழை மரக்கன்றுகள் இல்லை ஹம்பாந்தோட்டையிலிருந்தே தருவிக்க வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .