2026 மே 04, திங்கட்கிழமை

'மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில் முதலாவது மாவட்டமாக பிரகடனம்'

Kogilavani   / 2013 ஏப்ரல் 19 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்


'மட்டக்களப்பு மாவட்டம் வறுமையில் முதலாவது மாவட்டமாக மத்திய வங்கியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வறுமையான மாவட்டங்களில் யாழ்ப்பானம் இரண்டாவதாகவும், மொனறாகலை மாவட்டம் மூன்றாவதாகவும் உள்ளன' என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்;திலுள்ள மக்களின் வறுமையை போக்க சகல வழிகளிலும் சகலரும் உழைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுகொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் இவ்வாண்டுக்கான வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே பிரதியமைச்சர் முரளிதரன் மேற்கண்டவாறு கூறினார்.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணி;ப்பாளர் இரா.நெடுஞ்செழியன், பிரதியமைச்சர் முரளிதரனின் இணைப்பாளர் பொன்.ரவீந்திரன் உட்பட பிரதேச செயலாளர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைபெற்றுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மக்களின் வறுமையை ஒழிக்க பாடுபடவேண்டும். வறுமையை போக்க பல்வேறு வாழ்வாதார திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 51 அரசசார்பற்ற நிறுவனங்கள் கடiமாயற்றுகின்றன. இவைகள் வறிய மக்களின் வறுமையை போக்க நல்ல திட்டங்களை முன்வைத்து செயலாற்ற வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் வேலைத்திட்டம் தொடர்பான முன்னேற்றம் குறித்து இங்கு ஆராயப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .