2026 மே 04, திங்கட்கிழமை

சீனி உற்பத்திச் தொழிற்சாலைகளை நிறுவது தொடர்பான கூட்டம்

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 19 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் சீனி உற்பத்திச் தொழிற்சாலைகளை நிறுவது தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கூட்டமொன்று சீனி உற்பத்தி மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் செனவிரட்ன தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் 2 சீனி உற்பத்திச் தொழிற்சாலைகள் நிறுவப்படவுள்ளன. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீனி உற்பத்திச் தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக கரும்புச்செய்கை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, கிரான், ஏறாவூர்ப்பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 15,0000  ஹெக்ரேயர் நிலப்பரப்பில்  கரும்புச்செய்கையை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சீனி உற்பத்தி மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் செனவிரட்ன இக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பணித்தார்.

இந்த சீனி உற்பத்திச் தொழிற்சாலைகள்  75 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில்  அமைக்கப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில் ஊக்குவிப்பு உற்பத்தித்திறன் விருத்தி அமைச்சர் பசீர் சேகுதாவூத், பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .