2026 மே 04, திங்கட்கிழமை

சம்பந்தனை விமர்சிக்க அஸ்வருக்கு அருகதையில்லை: றம்ழான்

Kanagaraj   / 2013 ஏப்ரல் 20 , மு.ப. 09:44 - 5     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா சம்பந்தனை விமர்சிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வருக்கு எதுவித அருகதையும் கிடையாது என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் என்.கே றம்ழான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு;ள்ளதாவது.

நாட்டில் நலாபுரங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து அடக்கு முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு இன்று முஸ்லிம் சமூகம் அடிமைச் சமூகமாக அமைச்சர்கள் இருந்தும் அநாதைகளாக தங்களது மத அனுஸ்டானங்களைக் கூட சுதந்திரமாக நிறைவேற்ற முடியாது அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.

இக்கால கட்டத்தில் வாய் திறந்து பேச வேண்டிய இடத்தில் பேச முடியாத ஊமைகளாக முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் பயந்து போய் இந்து நிலையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை விமர்சிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வருக்கு எந்த  அருகதையும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

கையாலாகாத நாடாளுமன்ற உறுப்பினர்

தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பாதுகாத்துக் கொள்வதற்காக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகவும் புனித இஸ்லாத்திற்கு எதிராகவும் மிகவும் சுதந்திரமாக நடந்தேரும் பல்வேறு அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்க முடியாத முதுகொழும்பு இல்லாத கையாலாகாத நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் முஸ்லிம் மக்கள் மீது இழைக்கப்படும் மத அடக்கு முறையை எதிர்த்து குரல் கொடுத்த இரா. சம்பந்தனை விமர்சிப்பது வேடிக்கையானது.

அஸ்வர் இன்று என்ன செய்கின்றார்

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் வெளியேற்றப்பட்ட போது அதனை தடுத்து நிறுத்த முடியாத தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இன்று முஸ்லிம்களுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கின்றார் என தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் இன்று என்ன செய்கின்றார்.

இதுவரையும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக எத்தனையோ அநீதிகள் அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டும் அதற்காக ஒரு முறையேனும் குரல் கொடுத்தாரா? அல்லது தடுத்து நிறுத்தினாரா? எததையும் செய்ய முடியாத நாடாளுமன்ற  உறுப்பினர் அஸ்வர்  சம்பந்தனை விமர்சிப்பதில்  என்ன நியாயம் இருக்கின்றது. 

வெட்கித்தலைகுனிய வேண்டும்

முஸ்லிம் சமூகம் பற்றி ஒரு துளியேனும் கவலைப்படாது முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுப்பவர்களை விமர்சிப்பதும் தனது சுயநலத்திற்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுப்பதும் ஏனையவர்கள் முஸ்லிம் சமூகம் சார்ந்து எடுக்கும் நல்ல பல தீர்மானங்களை அதிகாரத் தரப்பினரிடம் போட்டுக் கொடுத்து தனது விசுவாசத்தை காட்டி வயிறு வளர்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் அவர்களை ஒரு முஸ்லிம் என்று கூறுவதில் வெட்கித்தலைகுனிய வேண்டும்.

அதே போன்று இன்று முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளையும் தேவைகளையும்  பேச வேண்டிய இடமான நாடாளுமன்றத்தில் பேசுவதை விட்டு விட்டு தில் இல்லாத ஒரு சில அரசியல் கோமாளிகள் சம்மாந்துரைக்கு வந்து சாமர்த்தியமாக கதை சொல்கின்றார்கள்.

சம்பந்தனுக்கு நன்றி தெரிவிக்கவேண்டும்

தான் பேச வேண்டிய இடத்தில் பேசியும் சண்டை பிடிக்க வேண்டிய இடத்தில் சண்டை பிடித்ததாகவும் தான் தனது வாழ்நாளில் அரசியலுக்காக என்றும் பொய் கூறியது கிடையாது என்று கூறுகின்ற முஸ்லிம்  தலைமைகளுக்கு மத்தியில் தனது சகோதர இனம் வஞ்சிக்கப்படுவதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களுக்கு முஸ்லிம் சமூகம் நன்றி தெரிவிக்க வேண்டும். எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 5

  • islam Saturday, 20 April 2013 11:09 AM

    உன்மையில் அஷ்வர் ஒரு முஷ்லிம் தானா?

    Reply : 0       0

    M.A.A.Rasheed Saturday, 20 April 2013 01:28 PM

    அஷ்வருக்கு நன்றி இருக்கா?

    Reply : 0       0

    நாசமறுப்பான் Saturday, 20 April 2013 05:12 PM

    மிகவும் சரியாகச் சொன்னீர்கள் றம்ழான் அவர்களே. பாராட்டுக்கள்.

    Reply : 0       0

    aizaad Sunday, 21 April 2013 02:08 AM

    தமிழ் மக்களோடு ஐக்கியப்பட்டு அரசியல் செய்ய வேண்டிய காலத்தில், கூலிக்கு மாரடிக்கும் சிலர் ஒரு விடயமல்ல !

    Reply : 0       0

    ash Sunday, 21 April 2013 07:14 AM

    கெளரவ இரா சம்பந்தன் ஐயா அவர்களே, வடக்கு முஸ்லிம்களை குடியேற்றும் விடயத்திலும் கிழக்கு முஸ்லிம்களின் காணிப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் விடயத்திலும் நீங்களும், கட்சி உருப்பினர்களும் சரியான நாடவடிக்கையினை மேற் கொண்டால் நிச்சயம் இன மத பேதமின்றி எல்லோரும் உங்கள் கட்சி ஆதரவாளர்களாக மாறும் நாள் தொலைவில் அல்ல...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .