2026 மே 15, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் கடல், வாவி தடைகளை அகற்றுமாறு உத்தரவு

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 23 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் மற்றும் வாவியில் சட்டவிரோதமான முறையில் மீனவர்களால் போடப்பட்டுள்ள மறிப்புகள் மற்றும் கொத்துகளை உடன் அகற்றுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உத்தரவிட்டுள்ளார்.

கடற்றொழில் திணைக்ளத்தின் அனுமதிப்பத்திரமின்றி கடல் மற்றும் வாவியில் இத்தகைய மறிப்புகளை ஏற்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைவாகவே மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட சுற்றாடல் பணிக்குழு கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளர் டொமின்கு ஜோர்ஜ் தெரிவித்தார்.

இத்தகைய நடவடிக்கைகளினால் கடல் மற்றும் வாவியில் வலை வீசி மீன்பிடிப்போருக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .