2026 மே 06, புதன்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 27 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் பிரதேசத்தில் இடம் பெற்ற மோட்டார் சைக்களில் விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவரின் சடலம் நிந்தவூர் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

நிந்தவூர் பிரதேச பாதை ஒன்றினால் பாதசாரி ஒருவர் கால் நடையாக சென்றுள்ளார் அவ் வேளையில் அவரின் பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை மீறி குறித்த நபரில் மோதுண்டதால் படுகாயமடைந்த இவர் பின்னர் உயிரிழந்துள்ளார். இம்மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிந்தவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள விபத்ததுக்குள்ளானவரின் சடலம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், மரண விசாரணைகளின் பின்னர் சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .