2026 மே 04, திங்கட்கிழமை

சமூக விஞ்ஞானப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு நாற்பது ரூபாய் பரிசு

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 27 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


சமூக விஞ்ஞானப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற மாணவர்களுக்கு வலயக் கல்விப் பணிமனையால் சிறிய அப்பியாசக் கொப்பிகள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

முதவாது இடத்தைப்பெற்ற மாணவருக்கு நாற்பது ரூபாய் பெறுமதியான மூன்று சீ.ஆர்.கொப்பிகளும், இரண்டாவது இடத்தைப் பெற்றவருக்கு இரண்டு சீ.ஆர் கொப்பிகளும், மூன்றாவது இடத்தைப் பெற்றவருக்கு ஒரு சீ.ஆர் கொப்பியும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

பரிசு கிடைத்திருப்பதையிட்டு ஆவலுடன் பார்சலைத் திறந்த மாணவர்கள் அதனுள் நாற்பது ரூபாய் பெறுமதியான சிறிய கொப்பி ஒன்றிருப்பதைக் கண்டு ஏமாற்றமடைந்தனர்.

மாகாண மட்டத்தில் முதலிடங்களைப் பெற்ற இந்த மாணவர்கள் கோட்ட மட்டம், வலய மட்டம், மாவட்ட மட்டம், மாகாண மட்டம் என்றவாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் வெகு பிரயாசைப்பட்டு வெவ்வேறு இடங்களில் இந்தப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார்கள்.

குறைந்த பட்சம் இந்த மாணவர்கள் பட்ட பிரயாசைக்கு நாற்பது ரூபாய் பெறுமதியான கொப்பியை விட ஒரு சான்றிதழையாவது அனுப்பி வைத்திருக்கலாம் என்று பெற்றோரும் அவர்களுக்குக் கற்பித்த ஆசியர்களும் ஆதங்கப்படுகின்றனர்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள மாணவர்களே சமூக விஞ்ஞானப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் பெற்றிருந்தனர்.

  Comments - 0

  • jesmin Saturday, 27 April 2013 04:54 PM

    மட்டக்களப்பு மத்தி வலயத்தில் இப்போது தலை இருக்க வால்கள்தான் மிகக் கடுமையாக ஆடிக்கொண்டிருக்கின்றன. முதலைகள் ஏப்பமிட்டு எஞ்சியவைதான் வழங்கப்பட்டதோ தெரியாது...

    Reply : 0       0

    vasisuga Sunday, 28 April 2013 04:50 AM

    இப் பரிசைத் தீர்மானித்த கல்வி அதிகாரிகள் அதிமேதாவிகளாவர்!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .