2026 மே 06, புதன்கிழமை

கைக்குண்டு வைத்திருந்தவர் கைது

Super User   / 2013 ஏப்ரல் 28 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக வாகரை  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித்த ஜயரெட்ன தெரிவித்தார்.

கதிரவெளியில் வைத்து ராமலிங்கம் ஷண்முகலிங்கம் என்ற இந்த நபர் கைக்குண்டொன்றை வேறு ஒருவருக்குக் கையளிக்க முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .