2026 மே 04, திங்கட்கிழமை

பள்ளிவாசல் நிருவாகிகள் தெரிவுக் கூட்டத்தில் கைகலப்பு

Super User   / 2013 ஏப்ரல் 28 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி 5ஆம் குறிச்சி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாசலின் புதிய நிருவாகிகளை தெரிவு செய்வதற்கான கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த பள்ளிவாசலின் புதிய நிருவாகிகளை தெரிவு செய்வதற்கான கூட்டம் நேற்று சனிக்கிழமை அஷர் தொழுகையின் பின்னர் பள்ளிவாசலின் மேல் மாடியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண பிரதி பணிப்பாளர் எம்.ஜுனைட், காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் மர்சூக் அகமட்லெவ்வை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கூட்டத்திற்கு வருகை தந்த ஒரு பிரிவினரின் வருகைக்கு மற்றுமொறு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனையடுத்து கூட்டத்தில் அமளி துமளி ஏற்பட்டதுடன் இரண்டு சாராருக்கும் இடையில் கைலப்பும் ஏற்பட்டது. பின்னர் கூட்டத்தை சமாளித்து காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி உரை நிகழ்த்தினார்.

இதையடுத்து படிப்படியாக கூட்டம் ஒழுங்கு முறையாக நடைபெற்று இறுதிக்கட்டத்தில் நிருவாக தெரிவுக்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்துக்கான பிரதி பணிப்பாளர் எம்.ஜுனைட் கூட்டத்தை வழிநடாத்திக் கொண்டிருந்த நிலையில் பள்ளிவாயல் ஜமாஅத்தார் பட்டியலை வாசித்துக் கொண்டிருந்த போது மீண்டும் கூட்டத்தில் வாய்த்தர்க்கம் ஏற்படவே கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதனால் இரண்டு சாராருக்கும் இடையில் கைகலப்பும் ஏற்பட்டது இதையடுத்து கூட்டம் இடை நடுவில் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் பள்ளிவாயலில் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது பள்ளிவாயலுக்க வெளியே இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இது தொடர்பாக முஸ்லிம் சமய பன்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருக்கும் வக்பு சபை பிரதிநிதிகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண பிரதி பணிப்பாளர் எம்.ஜுனைட் தெரிவித்தார்.

  Comments - 0

  • vallarasu Sunday, 28 April 2013 07:51 AM

    உங்களைப் போன்றவர்களால்தான் நாட்டில் முஸ்லிம்களின் பிரச்சினை இந்தளவுக்குப் போக காரணம். எல்லோருக்கும் பதவி ஆசை. வெட்கமில்லையா உங்களுக்கு?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .