2026 மே 06, புதன்கிழமை

திருடப்பட்ட தங்கச் சங்கிலி தங்கக் கட்டியாக மீட்பு

Super User   / 2013 ஏப்ரல் 28 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, சந்திவெளியிலுள்ள வீடொன்றிலிருந்து திருடப்பட்ட தங்கச் சங்கிலி, உருக்கிய தங்கக் கட்டியாக மீட்கப்பட்டுள்ளது என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சமீபத்தில் சந்திவெளியிலுள்ள வீடொன்றிலிருந்து ஒன்றரை இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளும் 110,000 ரூபா பணமும் திருடப்பட்டிருந்தன.

திருடப்பட்ட பணத்தில் 43,730 ரூபாவையும் ஒன்றரை பவுண் உருக்கப்பட்ட கட்டித் தங்கத்தையும் தாம் மீட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸ் சார்ஜன்ட் கே.எம். றபீக் தெரிவித்தார்.

திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபரக்ளில் நால்வரை தாம் புத்தளம் மற்றும் கொழும்பு பகுதிகளில் வைத்துக் கைது செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

திருடப்பட்ட நகை கொழும்பிலுள்ள நகைக் கடையொன்றில் விற்கப்பட்டு உருக்கிய நிலையில் இருந்தபோதே தாம் அதனை மீட்டதாக அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .