2026 மே 04, திங்கட்கிழமை

ஏறாவூரில் இரத்த தான நிகழ்வு

Super User   / 2013 ஏப்ரல் 28 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்காக ஏறாவூரில் இரத்த தான நிகழ்வொன்று நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

ஏறாவூர் அல் - அஷ்ஹர் பெண்கள் உயர் தர பாடசாலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆண்களும் பெண்களும் பங்கு பற்றி இரத்ததானம் வழங்கினர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குப் பொறுப்பான எச்.எம். ஜெலீலா மற்று ஏ.நிசாந்தினி ஆகியோர் தலைமையிலான வைத்திய குழுவினர் கொடையாளர்களிடமிருந்து இரத்தத்தை தானமாகப் பெற்றனர்.

நேற்றைய இரத்ததான நிகழ்வின் போது 78 பைந்து இரத்தம் ஏறாவூர் மக்களால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குக் கிடைத்ததாக வைத்தியர் எச்.எம்.ஜெலீலா தெரிவித்தார்.

ஏறாவூர் சமூக நல்லிணக்கம் மற்றும் வலுவூட்டலுக்கான நிறுவனமும் ஏறாவூர் இன்போ அமைப்பினரும் இணைந்து இந்த இரத்த தான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .