2026 மே 04, திங்கட்கிழமை

மஜீத் கிராமத்திற்கு பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விஜயம்

Super User   / 2013 ஏப்ரல் 28 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள ஏறாவூர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மஜீத் கிராமத்திற்கு பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் நேற்று சனிக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது குறித்த பிரதேசத்தில் ஹிரா பவுன்டேஸனின் அனுசரனையுடன் அமைக்கப்பட்ட அமைக்கப்பட்ட 75 கிணறுகளை மக்களிடம் கையளித்தார்.

இந்த பிரதேசத்திற்கான புதிய பள்ளிவாயல் அமைக்கப்பட்டு வரும்; இடத்தினையும் அங்கு மேற்கொள்ளப்படும் ஏனைய அபிவிருத்தி வேலைகளையும் நேரில் சென்று பிரதியமைச்சர் பார்வையிட்டதுடன் அப்பிரதேச மக்களின் தற்போதைய தேவைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய சகல தேவைகளையும் தனது அமைச்சின் மூலம் செய்து தருவதாக கிராம மக்களிடம் பிரதியமைச்சர் உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .