2026 மே 04, திங்கட்கிழமை

கைக்குண்டு மீட்பு

Super User   / 2013 ஏப்ரல் 29 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஓட்டமாவடி, தபால் கந்தோர் வீதியில் கைக்குண்டொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள அஹமதுலெப்பை அஹமது சலீம் என்பவரின் கடையின் முன்னால் நிலத்தை தோண்டிக்கொண்டிருந்தபோது இந்தக் குண்டு கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து குண்டு செயலிழக்கச் செய்யும் பணியில் படைத்தரப்பினர் ஈடுபட்டனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் வாழைச்சேனை  பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .