2026 மே 04, திங்கட்கிழமை

அமெரிக்க தூதுவர் மட்டு. விஜயம்

Super User   / 2013 ஏப்ரல் 29 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜீ. சிசேன் இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் அரசாங்கத்தின் நிதியுதவியில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் எல்லைக் கிராமமான பெரிய புல்லுமலை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தொகுதியின் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகவே அவர் அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீளிணக்கம் மற்றும் ஸ்திரத்தன்மை அடைதல் எனும் திட்டத்தின் கீழ் யூ.எஸ்.எயிட் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட 50 மில்லியன் ரூபாய் செலவில் இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத் தொகுதியில் பஸ் நிலையம் மற்றும் சந்தைத் தொகுதி என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்தக் கட்டிடத் தொகுதியினை அமெரிக்கத் தூதர் மிச்சேல் ஜே. சிசன் மக்களிடம் உத்தியோகபூர்வமாகவும் கையளித்தார்.
யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் பிராந்திய நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஆஷா ஹரிஸன், இலங்கைக்கான பிரதி நிதி டம்மி ஹரிஸன் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .