2026 மே 04, திங்கட்கிழமை

காட்டுயானை தாக்கியதில் வயோதிபர் உயிரிழப்பு

Kanagaraj   / 2013 ஏப்ரல் 29 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவில் பெரிய புல்லுமலை பிரதேசத்தில் யானை தாக்கிய சம்பவத்தில் வயோதிபர் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

வெள்ளாவெலி 35ம் கொலனியைச் சேர்ந்த விவசாயியான இவர் மட்டக்களப்பு பதுளை வீதியில் பெரிய புல்லுமலைப் பகுதியில் வேலான்மைச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றார்.

இவ்வாறு வேளான்மைச் செய்கையில் ஈடுபடும் இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வாடியில் இருக்கும் வேளையில் யானை தாக்கியுள்ள சம்பவத்தில் இவர் உயிர் இழந்துள்ளார்.

வெள்ளாவெலி 35 ஆம் கொலனியைச் சேர்ந்த 79 வயதுடைய எஸ்.சரவனமுத்து என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

செங்கலடி பதுளை வீதியில் பெரிய வட்டுவான், தும்பலாம் சோலை, பெரிய புல்லுமலை, மாவெளியாறு போன்ற பகுதிகளில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்ததைத் தொடர்ந்து குறிப்பிட்ட சில பகுதிகளில் யானைக்கான பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ் வீதிகள் பிரதான வீதிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளதால் காட்டு யானைகள் மக்களின் வாழ் விடங்களுக்குச் சென்று வீடுகள் மற்றும் சேனைப் பயிர்ச் செய்கைகளுக்கும் சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.   

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .