2026 மே 04, திங்கட்கிழமை

சிதைவுப் பொருட்களைக் கொண்டு ஆற்றங்கரை நிரப்புவதனால் மக்கள் விசனம்

Super User   / 2013 ஏப்ரல் 30 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


கல்லடிப்பால நிர்மாண பணியின்போது கைவிடப்பட்ட பாரிய சீமெந்துத் தூண்கள் மற்றும் கட்டிட சிதைவுப் பொருட்களைக் கொண்டு ஆற்றங்கரை நிரப்பப்படுவதனால் சுற்றாடல் மாசுபடுவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஆற்றங்கரைக்கு செல்லும் கல்லடி மக்காமாவடி வீதியின் முடிவினிலேயே இந்த சட்டவிரோத செயல் இடம்பெறுகின்றது.

இதனால் இயற்கை வளம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் மீனினங்களும் அழிய சந்தர்ப்பம் உள்ளது. அது மட்டுமல்லாது வெள்ள காலங்களில் வெள்ளம் வடிந்தோடுவதற்கான வழி தடைப்படுவதனால் குடியிருப்புக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும்.

சுhதாரன மனித வலுவைக்கொண்டு அகற்றமுடியாத பாரிய கொங்கிறீட் தூண்களையும் மற்றும் சிதைவுகளையும் பாரம் தூக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி ஆற்றங்கரை நிரப்பப்படுகின்றமை குறிப்பிடப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .