2026 மே 04, திங்கட்கிழமை

புதியரக சட்டவிரோத வலைகள் கைப்பற்றல்

Super User   / 2013 ஏப்ரல் 30 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


வாவி மீன் பிடித்தலுக்கு தடைசெய்யப்பட்ட சட்டவிரோத வலைகள் இன்று காலை மட்டக்களப்பு வாவியில் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்படடுள்ளது என மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் கே.ராஜ்குமார் தெரிவித்தார்.

மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் பொலிஸாரின் உதவியுடன் இன்று அதிகாலை 2.30 மணயளவில் முகத்துவாரம் வாவியில் திடீர் சுற்றிவளைப்பொன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது தொட்டாண்டி எனப்படும் மீன் பிடித்தலுக்கு தடைசெய்யப்பட்ட மிகச் சிறிய கண்ணளவை கொண்ட பெருமளவிலான வலைகள் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான இந்த வலைகள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

  Comments - 0

  • vallarasu Tuesday, 30 April 2013 09:47 AM

    பாவம்... இதற்குப்போய் நீதிமன்றம் போகாமல், அவ‌ர்களை கடும் எச்சரிக்கை பண்ணி அனுப்பி விடலாந்தானே? கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதுடன் மனித நேயத்தையும் கொஞ்சம் சேர்க்கலாமே...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .