2026 மே 04, திங்கட்கிழமை

வெருகலில் வயோதிபரின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2013 ஏப்ரல் 30 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மூன்று நாட்களாக மரத்தடியில் உயிரிழந்து கிடந்த வயோதிபரின் சடலத்தை வெருகல் பொலிஸார் இன்று மீட்டனர். வெருகல், பூமரத்தடிச்சேனை வாசியான 76 வயதுடைய பொன்னையா அரசரெட்ணம் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இன்று காலை அவ்வழியால் வந்த சிறுமி மேற்படி முதியவர் ஊதிப் பெருத்த நிலையில் தென்னங் கன்றுகளின் கீழ் மரணித்துக் கிடப்பதை அறிந்து தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வெருகல் பொலிஸாரும் சடுதி மரண விசாரணை அதிகாரியும் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்த வயோதிபர் தனியாக குச்சிக் குடிசையில் வசித்து வந்ததாகவும் கடைசியாக ஞாயிறன்று காட்டுக்குச் சென்று விறகெடுத்து வந்து குளித்து விட்டு அவ்விடத்தில் தூங்கியதைத் தாம் கண்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

தலையணையில் படுத்தவாறே சடலம் தென்னங் ன்றுகளின் அடியில் காணப்பட்டது. ஊதிப்பருத்த நிலையில் புழுக்கள் நிறைந்து காணப்பட்ட சடலம் விசாரணையின்  பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கிணங்க அடக்கம் செய்யப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .