2026 மே 04, திங்கட்கிழமை

பிரதேச சபை வாகன விபத்தில் மாணவன் படுகாயம்

Super User   / 2013 மே 01 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வாகரை பிரதேச சபையின் வாகனத்தில் மோதுண்டு மாணவனொருவன் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த மாணவன் மேலதிக அவசர சிகிச்சைக்காக மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்றுப் பிரதேச வைத்தியசாலையின் கடமை வைத்தியர் பாக்கியதுரை வடிவுக்கரசி தெரிவித்தார்.

வெருகல் துவாரகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற கோட்ட மட்ட விளையாட்டு நிகழ்ச்சியில் பங்குபற்றி விட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மடுப்பாலத்தடியில் வைத்து பிரதேச சபையின் வாகனத்துடன் குறித்த மாணவன் மோதுண்டுள்ளார்.

காயமடைந்த மாணவன் ஈச்சிலம்பற்று ஷண்பகா மகா வித்தியாலயத்தில் 8ஆம் தரத்தில் கல்வி கற்கும்  13 வயதுடைய வீரசிங்கம் தினேஸ் என்பவராகும் என பாடசாலை அதிபர் வி. அருள்நேசராஜா தெரிவித்தார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெருகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .