2026 மே 04, திங்கட்கிழமை

காத்தான்குடி கடற்கரை வீதி அபிவிருத்தி வேலைகள் ஜூலை மாதத்திற்கு முன் பூரணப்படுத்தப்பட உத்தரவு

Super User   / 2013 மே 01 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி கடற்கரை வீதி அபிவிருத்தி வேலைகள் ஜூலை மாதத்திற்கு முன் பூரணப்படுத்தப்பட வேண்டும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உத்தரவிட்டுள்ளார்.

ஜூலை மாதத்திற்கு முன் இந்த வீதியின் அபிவிருத்தி வேலைகள் முடிவடையாவிட்டால் ஒப்பந்தக்காரர்களுக்கான கொடுப்பணவுகள் இடைநிறுத்தப்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் உடனடியாக இந்த வீதியின் அபிவிருத்தி வேலைகளை துரிதப்படுத்துமாறு  சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

காத்தான்குடி கடற்கரை வீதியின் அபிவிருத்தி  வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு  பல மாதங்களாகியும் தொடர்ச்சியான மழை காரணமாகவும் பொறுப்பேற்றுள்ள ஒப்பந்தக்காரர்களின் அசமந்த  போக்குகளாலும் தொடர்ந்து செப்பனிடப்படாமல் காணப்படுகின்றது.

இதனால் பல்வேறுபட்ட சிரமங்களை பாதசாரிகளும் பொதுமக்களும் எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினுடைய பிரதம பொறியியலாளர் மற்றும் ஏனைய அதிகாரகளுடனும் கலந்துரையாடினார். 

இதன்போது இந்தப் பிரச்சனைகள் தொடர்ந்து இருக்கக்கூடாது என்றும் அவசரமாக அபிவிருத்தி வேலைகளைச் செய்து முடிக்க வேண்டும் என்றும் பிரதியமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .