2026 மே 04, திங்கட்கிழமை

கல்வி மையக் கட்டிடம் திறப்பு

Super User   / 2013 மே 01 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


ஜேர்மன் நாட்டு நுரம்பக் நகர மற்றும் இலங்கைக்கான நட்புறவு அமைப்பின் நிதியுதவியுடன் காத்தான்குடி முதலாம் குறிச்சியில் நிர்மாணிக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் கல்வி மையக் கட்டிடம் அண்மையில் திறந்துவைக்கப்பட்டது.

சுமார் நான்கு மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட இந்த கட்டிட திறப்பு விழாவில் ஜேர்மன் நாட்டு நுரம்பக் நகர சர்வதேச நிறுவனத்தின் முக்கியஸ்த்தர்களான கலாநிதி நோபட் ஸ்க்கேஜர்ஸ், கலாநிதி அல்றய்க் ஸ்கோன்பெக், மற்றும் ஜேர்மன் நாட்டு நுரம்பக் நகர மற்றும் இலங்கைக்கான நட்புறவு அமைப்பின் இலங்கைக்கான பிரதி நிதி கலாநிதி பஹ்மி இஸ்மாயில், கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் தலைவர் பி.எம்.எம்.மர்சூக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

காத்தான்குடி முதலாம் குறிச்சி வாவியோரம் நிர்மானிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் கல்வி மைய்யக் கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் இங்கு; அன்பளிப்புச் செய்யப்பட்ட கணணி வகுப்பையும் இவர்கள் பார்வையிட்டனர்.

இங்கு நிர்மானிக்கப்பட்டுள்ள இந்த கல்வி மைய்யக் கட்டிடத்தில் சிறவர் பாடசாலை மற்றும் கணணி வகுப்பு, சிறுவர் பூங்கா என்பன நிர்மானிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .