2026 மே 04, திங்கட்கிழமை

அதிகாரப் பகிர்வின் ஊடாக மாகாண சபையை பலப்படுத்துவோம்: சந்திரகாந்தன்

Super User   / 2013 மே 02 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

அதிகாரப் பகிர்வின் ஊடாக மாகாண சபையை பலப்படுத்துவோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடாத்தப்பட்ட மே தின கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் அதிகாரப் பகிர்வின் ஊடாக மாகாண சபையை பலப்படுத்தி அதன் மூலம் சிறுபான்மையினத்தவரின் அரசியல் அதிகாரங்கள் கிடைக்க வழி ஏற்படுத்தப்பட வேண்டும்  கிழக்கு வாழ் தமிழ் மக்களின் தனித்துவமான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது தொழிலாளர்களை கௌரவிக்கும் இந்த நிகழ்வினை மக்களோடு மக்களாக ஒன்றுசேர்ந்து அனுஸ்டித்து வருகின்றது.

அந்த வகையில்  கிழக்கில் அபிவிருத்திப் பணிகளுக்காக அரசுடன் ஒன்று சேர்ந்திருந்த போதிலும் கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அதிகாரங்களுக்காக  தொடர்ந்தும் குரல்கொடுக்கும் கட்சி எமது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி என்பதை நாம் நிரூபித்து வருகின்றோம்.

இலங்கை தேசத்தின் ஒற்றுமைக்கு தடையாக இருப்பவையாக இன, மத வேறுபாடு காணப்படுகின்றது. ஆனால் அவற்றையெல்லாம் கழைந்து எல்லா இனங்களும் , சமூகங்களும் தமது அதிகாரங்களை சரியான முறையில் பெற்றுக்கொள்கின்றபோதே "நாம் இலங்கையர்" என்ற தேசிய உணர்வு எல்லோர் மனத்திலும் ஆழமாகப் பதியும்.

அந்தவைகயில் இலங்கையில் 13ஆவது திருத்தத்தின் ஊடாக தோற்றம் பெற்ற மாகாண சபை முறையமையானது சிறுபான்;மை சமூகத்தினரின் அரசியல் அதிகாரத்தினை ஓரளவிற்காவது வழங்குகின்ற ஒரு அம்சமாகக் காணப்படுகின்றது.

இந்த மாகாண சபை முறைமையானது அதிகாரப் பரவலாகத்தின் ஊடாக வலுப்படுத்தப்பட வேண்டும். இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்கள் திருப்தியடைய அதிகூடிய குறைந்தபட்ச தீர்வு என்றால் அதிகாரப் பகிர்வு முறைமையின் வாயிலான 13ஆம் திருத்தத்தின் ஊடான மாகாண சபை முறைமையே தவிர வேறொன்றும் இல்லை.

இதனைத்தான் எமது கட்சி இன்று வலுயுறுத்தி நிற்கின்றது. அத்துடன் இலங்கையின் சில பேரினவாத சிந்தனை கொண்ட கட்சிகள் இன்று தமது அரசியல் சுயலாபத்திற்காக இனவாத்ததையோ அல்லது மதவாதத்தையோ கக்குகின்ற நிலையினை அவதானிக்க முடிகின்றது.

அதுமட்டுமன்றி குறைந்தபட்ச அதிகாரத்தையாவது வழங்கும் மாகாண சபை முறைமைக்கு வித்திட்ட 13ஆவது அரசியல் சீர்திருத்தத்தினை இல்லாதொழிப்பதற்குரிய கோசங்களை எழுப்பி வருகின்றன.  ஆனால் அவற்றையெல்லாம் அரசு ஜனநாயக முறையில் அணுகுவதுடன் இலங்கையின் சிறுபான்மையினங்களின் அரசியல் அதிகாரங்கள் தொடர்பில் இத்தகைய பேரினவாத சக்திகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாது"என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .