2026 மே 04, திங்கட்கிழமை

விபத்தில் இளைஞர் படுகாயம்; சாரதி பொலிஸில் சரணடைவு

Super User   / 2013 மே 02 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வெருகல் பொலிஸ் பிரிவில் பூமரத்தடிச்சேனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக இவர் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மேலதிக அவசர சிகிச்சை தேவைப்பட்டதால் அவரை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாகவும் பொறுப்பு வைத்திய அதிகாரி பாக்கியதுரை வடிவுக்கரசி தெரிவித்தார்.

விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்தவர் 34 வயதுடைய தங்கத்துரை ஜெயசீலன் என்று வெருகல் பொலிஸார் தெரிவித்தனர்.
வடி எனப்படும் சிறிய ரக வானமொன்றே வீதியால் சென்று கொண்டிருந்த இளைஞர் மீது முட்டி மோதி மிதித்து விட்டுச் சென்றுள்ளது.

காயமடைந்தவர் வீதியில் மயங்கிக் கிடந்த நிலையில் வாகனத்தின் சாரதி வாகனத்துடன் தப்பியோடிச் சென்று அருகிலுள்ள பொலிஸ் காவலரணில் சரணடைந்துள்ளார்.வாகனத்தைக் கைப்பற்றியுள்ள வெருகல் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .