2026 மே 04, திங்கட்கிழமை

ஊடக தாக்குதல்களின் பின்னணி புரிகிறது: ஜனா

A.P.Mathan   / 2013 மே 03 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

உதயன் பத்திரிகை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் இதுவரையில் முழுமையான விசாரணை நடவடிக்கையெடுக்காமை அதன் தாக்குதல்களின் பின்னணியை அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ளக்கூடியதாகவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அண்மைக்காலமாக ஊடங்கங்கள் மீதும் சில அரசியல்வாதிகள் மீதும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மற்றும் அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

உண்மை நிலையை வெளிக்கொணரும் ஊடகங்கள் மீதும் மக்களின் உரிமையை வெளிப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கும் எதிராக இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

வட பகுதியில் இருந்து வெளிவரும் பத்திரிகையான உதயன் மீது தொடர்ச்சியாக அழுத்தங்களும் தாக்குதல்களும் இடம்பெற்றுவருகின்றமையானது இந்த நாட்டின் ஜனநாயக தன்மையினை வெளியுலகுக்கு வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.

இன்று ஊடக அடக்கு முறைகளுக்கு மத்தியிலும் தமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் பின்னிற்காமல் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஓர் ஊடகத்தின் மீதான தாக்குதல் அதன் உண்மைத்தன்மையினை வெளிக்காட்டிநிற்கின்றது.

இவ்வாறான தாக்குதல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தவேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமையாகும். அந்த கடமையை இன்றுவரை நிறைவேற்றாமல் இருப்பதானது அதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை தெளிவாக காட்டிநிற்கின்றது.

எனவே ஊடக அடக்குமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய பாரிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .