2026 மே 06, புதன்கிழமை

நம் நாடு எதனால் ஆளப்படுகிறது: தனாவின் சந்தேகம்

A.P.Mathan   / 2013 மே 03 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

நாட்டை ஆள்வது அமைச்சரவையா? நாடாளுமன்றமா? நிறைவேற்று துறையா? அல்லது இதற்கு அப்பாலும் உள்ள அவர்களது குழுவா என்ற சந்தேகம் தனக்குள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தற்போது நடைபெற்றுவரும் மின்சாரக்கட்டண அதிகரிப்பு விவகார அரசியல் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

நம் நாடு அரசியலமைப்பால் ஆளப்படுகிறதா என்ற சந்தேகம் எனக்கு அண்மைக்கால செய்திகளை அறியும் போது எண்ணத் தோன்றுகிறது. நிறைவேற்றுத்துறை நிருவாகத்துறை உள்ளடக்கிய அமைச்சரவை சட்டவாக்கத்துறையான நாடாளுமன்றம் ஆகியன இணைந்ததே நாட்டை ஆட்சி செய்யும் அரச இயந்திரம்.

அண்மைய விவகாரமான மின்சாரக்கட்டண உயர்வு தொடர்பாக அரசுக்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்த அமுக்கம் வெடித்ததன் பின்னணியிலேயே எனக்கு நம்நாடு ஆளப்படுவது தொடர்பாகவும் ஆட்சி, அதிகாரம் அரசியலமைப்புக்கு ஏற்பவும் நடைபெறுகின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் மின்கட்டண அதிகரிப்பு தொடர்பான அரச அறிக்கையின் பின்புலத்தில் நாட்டுக்கு பகிரங்கமான செய்திகளை நாம் காணும்போது நம்நாடு ஆட்சி தொடர்பான இக் கேள்வி அனைவருக்கும் எழுவதில் ஆச்சரியமில்லை.

மின்கட்டண அதிகரிப்பு தொடர்பாக அரச அறிவித்தல் வெளியாகிய பின்னணியில் அமைச்சரவை உறுப்பினர்களும் ஆளும் கூட்டணிக் கட்சியினரும் வெளியிடும் கருத்துக்கள் அன்றாடம் பத்திரிகைகளில் வருவதைப் பார்த்தால் ஆட்சி நடத்தும் அரசியல் இலட்சணமும் அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பின் அவலட்சணமும் அப்பட்டமான நிர்வாணமாக அசிங்கமாகின்றது.

மின்சாரக்கட்டணம் அதிகரிப்பு தொடர்பாக ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுடனும் பத்திரிகையாளர்களிடமும் கலந்துரையாடியபோது அதிகாரம் மிக்க அமைச்சர் பசில் ராஜபக்ஷ இலங்கை மின்சார சபையை மாபியா கும்பல் எனச் சாடியதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. அந்த இறுக்கத்தை ஜனாதிபதி அவர்கள் சமாளித்ததாகவும் அதே பத்திரிகைகளில் செய்தி வெளியாகியது.

இதை விட புதிய மின்சார அமைச்சர் இக்கட்டண அதிகிப்புக்கு முன்னார் அமைச்சரே சிபார்சு செய்ததாகவும் அதன் அடிப்படையில் தான் அதிகரிப்பு செய்ததாகவும் செய்தி வெளியாகிய பின்னணியில் முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க, பவித்திராவின் அப்பட்டமான பொய் இது என மறுக்கின்றார். இன்றுவரை எவரது கூற்று சரி என கருத்துக் கூறவல்ல அமைச்சர்களோ (ஹெகலிய ரம்புக்வல்ல) அதிகாரிகளோ இதை ஏற்கவோ மறுக்கவோ இல்லை.

இதைவிடவும் சுவாரசியம் எல்லாவற்றுக்கும் கூட்டமைப்பையும் இந்தியாவையும் அமெரிக்காவையும் குறை கூறும் அமைச்சர் விமல் வீரவன்ச தானும் தன்பவருக்கு அரசை (அவர் ஏதோ அரசின் அங்கமல்ல என்ற தொனியில்) விமர்சிக்கிறார்.

இதற்கு மேலாக அமைச்சர் திஸ்ஸ வித்தாரண, வாசுதேவ நாணயக்கார அவர்களும் தாம் அரசின் பங்காளிகள், அரசின் தீர்மானத்துக்கு பொறுப்பாளிகள் என்ற கூட்டுப் பொறுப்பை மறந்து இந்த விடயத்தில் குதிக்கின்றனர்.

இவற்றையெல்லாம் கூட்டிப் பெருக்கி, கழித்துப் பிரித்துப் பார்த்தால் சிவில் சமூகம், சர்வதேச சமூகம், ஐ.நா குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகள், அனைத்தும் கூறுவது போல் நாட்டை ஆள்வது அமைச்சரவையா நாடாளுமன்றமா நிறைவேற்று துறையா அல்லது, இதற்கு அப்பாலும் உள்ள அவர்களது குழுவா என்ற சந்தேகம் எனக்கு எழுவது ஒன்றும் வியப்பில்லைதானே.

அன்று நாம் அடித்துக் கூறினோம் நம் நாட்டில் ஜனநாயகம் இல்லை. அது உறுதி செய்யப்பட வேண்டும் என்று. அது ஏற்கப்படவுமில்லை. இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பால், அமைச்சரவை உறுப்பினர்களால் அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தீர்மானங்கள் எங்கிருந்தோ பெறப்படுவதாக எனக்கும் எனது கட்சி சார்ந்த நடவடிக்கைகளுக்கும் இது இப்போது பொருந்தாது எண்ணும் என் மக்களும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் இதை ஒட்டி எனது கருத்துக்களையும் பகிர்வது காலத்தின் கட்டாயம் என்பதாலும் என் மக்களுக்கும் புரியாத சிங்கள தேசியத்துக்கும் புரியவைக்கிறேன்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .