2026 மே 04, திங்கட்கிழமை

இளைஞர் நாடாளுமன்றத்திற்கு எட்டு இளைஞர்கள் போட்டியின்றி தெரிவு: எம்.எல்.எம்.நைறூஸ்

A.P.Mathan   / 2013 மே 03 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எட்டு பிரதேச செயலாளர் பிரிவுகளில் இளைஞர் நாடாளுமன்றத்திற்கு எட்டு இளைஞர்கள் போட்டியின்றி தெரிவு செய்யப்படுவார்கள் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.எல்.எம்.நைறூஸ் தெரிவித்தார்.

நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்தும் 14பேர் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளார்கள்.

இதில் கிரான் மற்றும் வவுணதீவு, வெல்லாவெளி, ஆரையம்பதி, ஏறாவூர் நகர், செங்கலடி, கோறளைப்பற்று மத்தி, வாகரை ஆகிய எட்டு பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து தலா ஒருவர் மாத்திரமே வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளதால் இங்கு தேர்தல் நடத்தாமல் இந்த எட்டுப்பேரும் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவர் எனவும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்முனை வடக்கு, காத்தான்குடி, களுவாஞ்சிகுடி, பட்டிப்பளை, ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மாத்திரமே இளைஞர் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .