2026 மே 04, திங்கட்கிழமை

சிறப்பாக வரி செலுத்தியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்

A.P.Mathan   / 2013 மே 04 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சிறப்பாக வரி செலுத்தியோர் முதற் தடவையாக இன்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் இந்த வைபவம் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெற்றது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் எம்.கணேசராசா தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திருமதி மல்லிகா சமரசேகர மற்றும் சிரேஷ்ட வரி மதிப்பீட்டாளர் பந்துல கப்புதன்ரிய உட்பட வரி மதிப்பீட்டு உத்தியோகத்தர்கள் அதன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றதுடன் சிறப்பாக வரி செலுத்திய பலரும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு பத்து லட்சம் ரூபா வரி செலுத்தியவர்களுக்கு தங்க அட்டையும் விருதும், 5 இலட்சம் ரூபாவிலிருந்து 10 இலட்சம் ரூபாவுக்குள் வரி செலுத்தியவர்களுக்கு வெள்ளி அட்டையும், விருதும் மற்றும் இரண்டரை இலட்சம் ரூபாவிலிருந்து 5 இலட்சம் ரூபாவரை வரி செலுத்தியோருக்கு வெண்கல அட்டையும் நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவித்ததுடன் சிறப்பாக வரி செலுத்தியவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .