2026 மே 04, திங்கட்கிழமை

பாடசாலை அபிவிருத்தி சங்கங்களை வலுவூட்டும் செயலமர்வுகள்

A.P.Mathan   / 2013 மே 04 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வ.சக்திவேல்

பாடசாலை அபிவிருத்தி சங்கங்களை வலுவூட்டும் செயலமர்வுகள் வேல்ட் விஷன் அமைப்பின் பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தி திட்டத்தின் கல்விக்கான திட்ட இணைப்பாளர் இ.அமுதராஜா தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலை அபிவிருத்தி சங்கங்களையும்  வலுவூட்டுவதோடு பாடசாலைக்கும் அபிவிருத்தி சங்கங்களிற்கும் அத்தோடிணைந்த பெற்றோருக்குமிடையே ஓர் இணைப்பை ஏற்படுத்தி எதிர்காலத்தில் சிறந்த சேவையை மாணவர்களிற்கும் கல்விச் சமூகத்திற்கும் வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும் என இதன் திட்ட இணைப்பாளர் இ.அமுதராஜா தெரிவித்தார்.

இச்செயற்றிட்டத்தில் பட்டிப்பளை பிரதேச கோட்டக்கல்வி அதிகாரி ந.தயாசீலன் அவர்களும் பாடசாலை அதிபர்களும் தங்களது முழுமையான பங்களிப்பினை நல்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் முன்னோடியாக பட்டிப்பளை பிரதேச கல்விக் கோட்டத்திற்குட்பட்ட மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்திலும், முதலைக்குடா மகா வித்தியாலயத்திலும், முனைக்காடு விவேகானந்தா வித்தியாலயத்திலும், மாவடிமுன்மாரி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும், கடுக்காமுனை வாணி வித்தியாலயத்திலும், விடுதிக்கல் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்திலும், பாடசாலை அபிவிருத்தி சங்கங்களிற்கான செயலமர்வுகள் முடிவுற்ற நிலையில் அவர்களிற்கான 6 மாத காலத்திற்கான திட்ட முன்மொழிவுகளும் அவர்களால் தாயாரிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

மேலும் நேற்று குளுவினமடு விநாயகர் வித்தியாலய பாடசாலை அபிவிருத்தி சங்கத்திற்கான செயலமர்வு நடைபெற்றது. இதில் 46 பேர் கலந்துகொண்டனர் என்பதும் சிறப்பம்சமாகும்.

பின்தங்கிய பகுதியில் இவ்வாறான கல்வி சார்ந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதானது பொரும் வராவேற்பாகவுள்ளதாக அப்பகுதி வாழ் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .