2026 மே 04, திங்கட்கிழமை

இயற்கை பசளை தயாரிக்கும் நிலையத்தை 'பிலிசறு' பிரிவு உத்தியோகத்தர்கள் பார்வை

Suganthini Ratnam   / 2013 மே 05 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி அப்துல் லத்தீப் சி;ன்னலெவ்வை மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற குப்பைகளை தரம் பிரித்து இயற்கை பசளை ஆக்கும் நிலையத்தை இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் 'பிலிசறு' பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் நேற்று  சனிக்கிழமை பார்வையிட்டனர்.

காத்தான்குடி நகர சபை, காத்தான்குடி அப்துல் லத்தீப் சி;ன்னலெவ்வை மாவத்தையில் குப்பைகளை தரம் பிரித்து இயற்கை பசளை ஆக்கும் நிலையத்தை நிர்மாணித்து வருகின்றது.

இந்த நிலையத்தின் நிர்மாண வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையிலேயே இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் 'பிலிசறு' பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் இந்த நிலையத்தை பார்வையிட்டனர்.

மேற்படி உத்தியோத்தர்களுடன் காத்தான்குடி நகர சபையின் நகர முதல்வர் எஸ்.எச்.அஸ்பர்,  நிர்மாண வேலை அத்தியட்சகர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் இந்த நிலையத்தின் நிர்மாண வேலைகளை பார்வையிட்டனர்.

இந்த நிர்மாண வேலைகள் தொடர்பில் பாராட்டுக்களை தெரிவித்தும், இந்த திண்மக்கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தினை கிழக்கு மாகாணத்திற்குரிய  திண்மக் கழிவு முகாமைத்துவ பயிற்சி நிலையமாக மாற்றுவது தொடர்பாகவும் தங்களது ஆலோசனைகளை மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள் வழங்கியதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எஅஸ்பர் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .