2026 மே 04, திங்கட்கிழமை

கலாசார விவரத் திரட்டுக் கைந்நூல் தயாரிக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 மே 05 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேச செயலகத்தினால் கலாசார விவரத் திரட்டு கைந்நூல் தயாரிக்கப்படவுள்ளது.

பிரதேச செயலக கலாசார பிரிவினால் இந்த ஆண்டுக்கான கலாசார விவரத் திரட்டுக் கைந்நூல்  தயாரிக்கப்படவுள்ளதாக அப்பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தெரிவித்தார்.

கலைஞர்கள், பிரதேச செயலக கலாசார பிரிவுடன் தொடர்புகொண்டு விண்ணப்பப்படிவங்களைப் பூர்த்தி செய்து கொடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏறாவூர் நகரப் பிரதேச செயலாளர் பிரிவில் கலாசாரத் திரட்டுக் கைந்நூல் தயாரிக்கப்படுவது இதுவே முதற் தடவையென்பது குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .