2026 மே 04, திங்கட்கிழமை

காத்தான்குடியில் முதியவரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 மே 05 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கடற்கரையில் முதியவரொருவரின் சடலம்  இன்று ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கியுள்ளது.

காத்தான்குடி 6ஆம் குறிச்சி ஜன்னத் மாவத்தையை சேர்ந்த அலியார் இப்றாகீம் (வயது 72) என்பவரது  சடலமென்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி கடற்கரையில் முதியவரொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக  பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கடலில் விழுந்து உயிரிழந்திருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேக வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .