2026 மே 06, புதன்கிழமை

காக்காச்சுவட்டை கிராமத்தில் சிறிய கடை தீக்கிரை

A.P.Mathan   / 2013 மே 05 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வ.சக்திவேல்


மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்திற்குட்பட்ட காக்காச்சுவட்டை கிராமத்தில் நேற்று சனிக்கிழமை இரவு சிறிய கடை ஒன்று இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

காக்காச்சுட்டைக் கிராமத்தின் சந்தியில் அமைந்திருந்த சிறிய கடயொன்றே இவ்வாறு தீக்கிரையாக்கப் பட்டுள்ளது.

இதில் காக்காச்சுவட்டைக் கிராமத்தினைச் சேர்ந்த பெண் ஒருவர் மரக்கறி மற்றும் ஏனைய பொருட்களை விற்பனை செய்து தமது வாழ்வாதாரத்தினை மேற்கொண்டு வருகின்றார்.

வழக்கம்போல் தமது வீட்டிலிருந்து இன்று காலை விற்பனைக்காக பொருட்களை எடுத்து வந்து பார்கையில் கடை எரிந்து கிடப்பதையிட்டு பெரும் கவலையடைந்துள்ளார்.

இருந்தபோதிலும் தமது வியாபாரத்தினை அருகிலுள்ள மரதின் கீழிருந்து தற்போது நடாத்தி வருகின்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .