2026 மே 06, புதன்கிழமை

பாடசாலைக்குள் காட்டு யானை புகுந்ததால் மாணவர்கள், ஆசிரியர்கள் ஓட்டம்

Super User   / 2013 மே 08 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள மண்டூர் - 35 கண்ணன் வித்தியாலயத்திற்குள் நேற்று செவ்வாய்க்கிழமை காட்டு யானை புகுந்ததால், அந்த பாடசாலை மாணவர்களும் அதிபர் மற்றும் ஆசியர்களும் அச்சமடைந்ததுடன் பாடசாலையை விட்டும் ஓடி ஒழிந்துள்ளனர்.

கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இக்கிராமத்தில் வசித்து வரும் மக்கள் இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்துள்ளனர். இந்த கிராமத்திற்குள் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து பலரை தாக்கியுள்ளதுடன் பலரின் உடமைகைளையும் சேதப்படுத்தியுள்ளது.

யானைகளின் அட்டகாசத்தினால் இங்குள்ள மண்டூர் - 35 கண்ணன் வித்தியாலய மாணவர்கள் அச்சத்துடன் கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று; இந்த பாடசாலைக்குள் யானை புகந்ததால் இப்பாடசாலை மாணவர்களும் அசிரியர்களும் அதிபரும் செய்வதறியாது ஓடி ஒழிந்துள்ளனர்.

இப்பாடசாலைக்குள் புகுந்த யானை சில நிமிடங்களின் பின்னர் வெளியேறியுள்ளது. இந்த யானை பாடசாலைக்குள் யானை புகுந்தது தொடர்பில் கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கும் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை அடிக்கடி இப்பாடசாலைக்கு ஏற்படுவதாகவும் இது தொடருமாயின் இந்த பாடசாலையை நடாத்துவதில் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படுமென இப்பாடசாலையின் அதிபர் பி.சுந்தரராஜன் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .