2026 மே 06, புதன்கிழமை

ஐரோப்பிய யூனியனின் இலங்கை தூதுவர் கிழக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2013 மே 13 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

ஐரோப்பிய யூனியனின் இலங்கை தூதுவர் பேனாட் சேவேவே (ளநஎநஎந) எதிர்வரும் 15ஆம் திகதி கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் ஐரோப்பிய யூனியனினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை இவர் நேரில் சென்று பார்வையிடவுள்ளார்.

எதிர்வரும் 15ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதி வரை அபிவிருத்திப் பணிகளை பார்வையிடவுள்ளார்; என இந்த நிகழ்விற்கான திட்ட இணைப்பாளர் ரோஹண சிறிவர்த்தன தெரிவித்தார்.

588 யூரோ மில்லியன் நிதியில்; கிழக்கு மாகாணத்தில் ஐரோப்பிய யூனியன் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருதாகவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .