2026 மே 07, வியாழக்கிழமை

ஜே.சி.பி இயந்திரம் சேவையில்

Suganthini Ratnam   / 2013 மே 24 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச சபையினால் முதல் தடவையாக கொள்வனவு செய்யப்பட்ட ஜே.சி.பி இயந்திரம் நேற்று வியாழக்கிழமை சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.

மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர்  சி.ஜே.அருள்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச சபையின் அபிவிருத்தி ஆலாசனைக்குழு உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஜே.சி.பி இயந்திரம் உள்ளூராட்சி கடன் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 80 வீதமும் பிரதேச சபையின் 20 வீத நிதியிலிருந்தும் 11.6 மில்லியன் ரூபா நிதியிலிருந்து பெறப்பட்டுள்ளதாக மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் சி.ஜே.அருள்பிரகாசம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .