2026 மே 07, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றுகூடல்

A.P.Mathan   / 2013 மே 24 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்
 
மட்டக்களப்பிலுள்ள சர்வதேச, உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் சமூக, தொண்டு நிறுவனங்களினுடைய ஒன்று கூடல் எதிர்வரும் 28ஆம் திகதி மட்டக்களப்பு வாசிகசாலை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
 
காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள இவ் ஒன்று கூடலை மட்டக்களப்பு மாவட்ட உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் வி.கமலதாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது
 
கலந்துகொள்ள விரும்புபவர்கள் இணையத்தின் தலைவருடன் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இக் கலந்துரையாடல் மாவட்டத்தின் அபிவிருத்திகள், சமகால சமூகப் பாதுகாப்புப் போக்குகளும் ஆராயப்படவுள்ளன.
 
இதற்கான அனுசரணையை சரீரம் நிறுவனம், மனிதநேய முகவர் அமைப்புகளின் ஒன்றியமும் வழங்குகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .