2026 மே 07, வியாழக்கிழமை

வந்தாறுமூலையில் பரிசாரகம் நூல் வெளியீடு

A.P.Mathan   / 2013 மே 24 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எஸ்.வதனகுமார்

சித்தாண்டி மருத்துவர்குடித் திருவிழாக் குழுவினரின் பரிசாரகம் நூல் வெளியீடு நாளை சனிக்கிழமை மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் சி.ரவிந்திரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
 
நாளை காலை 10.00 மணிக்கு இடம்பெறும் இந் நூல் வெளியீட்டில் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைப் பீடாதிபதி பேராசிரியர் சி.மௌனகுரு பிரதம விருந்தினராகக் கலந்துகொள்வதுடன் மட்டக்களப்பு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன், முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் கிருஸ்டி முருகுப்பிள்ளை, ஆதவன் அச்சக உரிமையாளர் வை.வீரசிங்கம், ஓய்வுபெற்ற அதிபர் செபஸ்தியான் கவுரியல் அகியோர் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.
 
நூல் நயவுரையினை மட்டக்களப்பு கலாசார உத்தியோகஸ்தர் த.மலர்ச்செல்வன் வழங்குவதுடன் விருந்தினர் உரையினைத் தொடர்ந்து சிறப்புரையினை நா.இராமநாதன் மற்றும் சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி கோவில் வண்ணக்கர் ப.மயில்வாகனம் ஆகியோர் ஆற்றவுள்ளனர். ஏற்புரையினையும் நன்றியுரையினையும் ஆசிரியர் மூ.சசிதரன் வழங்கவுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .