2026 மே 07, வியாழக்கிழமை

'புத்தர் சிலை வைப்பதை தடுக்க வேண்டும்'

Kogilavani   / 2013 மே 27 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'மட்டக்களப்பு நகரின் நுழைவாயலில் திட்டமிட்ட முறையில் புத்தர் சிலை வைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த அனைத்து வழிகளிலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்' என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

'மட்டக்களப்பு மாவட்டமானது முற்றுமுழுதாக தமிழ்பேசும் மக்கள் வாழும் பிரதேசமாகும். இங்கு மேலதிகமாக புத்த சிலைகளை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை.

ஊறணியில் உள்ள மட்டக்களப்பு நுழைவாயிலுக்கு அருகில் புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுக்கொள்வதுடன் இவ்வாறான சம்பவங்களை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றேன்.

இவ்வாறான நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் அமைதியை குலைக்கும் நடவடிக்கையாகவே கருதவேண்டியுள்ளது.

இந்த புத்தசிலை அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் அதனை தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும்.

தற்போது மட்டக்களப்பு நகரில் புத்தர் சிலை அமைப்பதற்கான தேவை எதுவும் இல்லாத நிலையில் இதுபோன்ற நடவடிக்கை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என'; தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .