2026 மே 07, வியாழக்கிழமை

ஏறாவூர் விபத்தில் இருவர் காயம்

Kanagaraj   / 2013 மே 27 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஏறாவூர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். 

இச்சம்பவம் இன்றுஇரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் வண்டி ஒன்றும் துவிச்சக்கர வண்டி ஒன்றுமே  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விரு வண்டிகளிலும் பயணித்த இருவரும் காயமடைந்து ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .