2026 மே 07, வியாழக்கிழமை

தற்கொலை செய்வோரின் தொகை மட்டக்களப்பில் அதிகரிப்பு

Menaka Mookandi   / 2013 மே 29 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தற்கொலை செய்வர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றது. இது இந்த சமூகத்தில் சிவப்பு சமிஞ்சையை காட்டுகின்றது' என மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் தலைவர் வி.கமலதாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இணையத்தின் தலைவர் வி.கமலதாஸ் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக இளம் பிராயத்தினர் தற்கொலை செய்கின்றனர்' என்று சுட்டிக்காட்டினார்.

'அதேபோன்று இளம் தாய்மார் தமது பிள்ளைகளுடன் தற்கொலை செய்வதுடன் குழந்தைகளையும் தற்கொலை செய்ய வைக்கின்றனர். தற்கொலை முயற்சிகளும் அதிகரித்து செல்கின்றன. ஆலயங்களும் சிதைக்கப்படுகின்றன' என்றார்.

'இவ்வாறான செயற்பாடுகள் இந்த சமூகத்தில் சிவப்பு சமிஞ்சை வன்முறை சுட்டிகளை காட்டுகின்றன. இவற்றுக்கான காரணங்களை அடையாளம் கண்டு இந்த செயற்பாடுகளில் இருந்து நமது சமூகத்தை மீட்டெடுப்பதுடன் இளம் பிராயத்தினரை இவற்றிலிருந்து நாம் பாதுகாக்க வேண்டும்' என்றார்.
 
'மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்மைக்காலமாக அடிக்கடி இடம்பெற்று வரும் தற்கொலை சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்கள் மூலமாக அறிந்து கொள்கின்றோம். இவற்றுக்கான காரணங்களை நாம் இனம்காண வேண்டும்' என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் இணையத்தின் செயலாளர் எஸ்.லவகுமார், பொருளாளர் செல்லகுமார் உட்டப உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.

அரச சார்பற்ற நிறுவனங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் இணையத்தின் மாதார்ந்த முன்னேற்றம் தொடர்பாக இக்கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .