2026 மே 09, சனிக்கிழமை

dd

கிழக்கு கணக்காய்வு அதிகாரி இடைநிறுத்தம்

Kanagaraj   / 2013 மே 31 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண பிரதான கணக்காய்வு அதிகாரியை பணியிலிருந்து இடைநிறுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விக்ரம மாகாண அரச சேவை ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

வாகரையில் சைக்கிளில் சென்ற இருவரை விபத்துக்குள்ளாக்கியமை, அரச வாகனத்திற்கு சேதம் விளைவித்தமை, பொறுப்பு கூறவேண்டிய அதிகாரியின் பொறுப்பை செயற்படுத்தாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளே அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

அந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையிலேயே கிழக்கு மாகாண பிரதான கணக்காய்வு அதிகாரியை பணியிலிருந்து இடைநிறுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் கோரியுள்ளார்.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக மூவர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .