2026 மே 07, வியாழக்கிழமை

இளைஞர் தினத்தையொட்டி இளைஞர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2013 ஜூன் 01 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


 
எம்.எஸ்.எம்.நுர்தீன், ஜவ்பர்கான்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஸ்ரீPலங்கா இளைஞர் தினத்தையொட்டி மட்டக்களப்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இளைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இளைஞர்களை கௌரவிக்கும் இந்நிகழ்வு  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு அலுவலகத்தின் ஏற்பாட்டில் கல்லடி,  துளசி மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் உற்பத்தி மற்றும் திறன் விருத்தி அமைச்சர் பசீர் சேகுதாவூத், மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா, மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.என்.எம்.நைறூஸ், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திருமதி கலாராணி, எம்.அமீர் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பூ.பிரசாந்தன், காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நடவடிக்கைகளில் திறமையுடனும் ஈடுபாடுடன் செயற்பட்ட இளைஞர் கழக உறுப்பினர்கள், மாவட்ட இளைஞர் சம்மேளன பிரதிநிதிகள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அமைச்சர் பசீர் சேகுதாவூத்தும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .