2026 மே 07, வியாழக்கிழமை

நகரசபை, பிரதேச சபை தலைவர்கள் ஜேர்மனுக்கு விஜயம்

Kogilavani   / 2013 ஜூன் 04 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரசபை தலைவர் மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை தலைவர் ஆகியோர் இம்மாதம் 17ஆம் திகதி ஜேர்மன் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

ஜேர்மனில் நடைபெறும் நிலையான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே இவர்கள் ஜேர்மனுக்கு விஜயம்மேற்கொள்ளவுள்ளனர்.

உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், ஓட்டமாவடி பிரதேச சபையின் தலைவர் எம்.ஹமீட் ஆகிய இருவரும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற அபிவிருத்தி தொடர்பான மாநாட்டிலும் இவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .