2026 மே 07, வியாழக்கிழமை

பாலர் பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஜூன் 05 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, காத்தான்குடியிலுள்ள பாலர் பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வும் வறிய குடும்பங்களுக்கு உதவிக் தொகை வழங்கும் நிகழ்வும் நேற்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்றது.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் நிதியுதவியில் ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தினால் இந்த தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த வைபவத்தில், பிரதியைமச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உட்பட பல முக்கியஸ்த்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது காத்தான்குடியிலுள்ள அப்றா, ஜன்னத் மற்றும் ஹிஸ்புல்லா ஆகிய  பாலர் பாடசாலைகளுக்கு தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதேவேளை,  சுத்தமான குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்வதற்காக தலா ஒரு குடும்பத்திற்கு ஐய்யாயிரம் ரூபா வீதம் காத்தான்குடி மற்றும் காங்கேயனோடை பிரதேசங்களை சேர்ந்த நூறு வறிய குடும்பங்களுக்கு உதவிக்கொடுப்பணவும் வழங்கி வைக்கப்பட்டது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .